ஷிவ்ராஜ்குமாரின் மிரட்டல் லுக்.. 45 படத்தின் அலறவைக்கும் டீசர்.!
விஜய் பட வில்லனின் தற்போதைய பரிதாப நிலை.? வைரலாகும் வில்லன் நடிகரின் பேட்டி.!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய். இவர் பல ஹிட் திரைப்படங்களை தமிழ் சினிமாவிற்கு அளித்துள்ளார். இவர் நடிப்பில் வெளியான திரைப்படங்கள் தொடர்ந்து ஹிட்டாகி வருவதால் இவரை 'இளைய தளபதி' என்று ரசிகர்கள் அன்போடு அழைத்து வருகின்றனர்.
இது போன்ற நிலையில், 2007 ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான 'போக்கிரி' திரைப்படம் மிகப்பெரிய ஹிட்டானது. இப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்த நடிகர் சமீபத்தில் யூ ட்யுப் சேனல் ஒன்றில் பேட்டி அளித்துள்ளார்.
பிரபல நடிகர் எஸ்.ஏ அசோகனின் மகன் தான் வில்லன் நடிகர் வின்சென்ட் அசோகர். இவர் தமிழில் ஏய், தொட்டி ஜெயா, ஆழ்வார், முருகா, யோகி, குட்டி, முதல் கனவே, போக்கிரி, துப்பறிவாளன், இரும்புத்திரை, டிக் டிக், மாரி 2, வடசென்னை, லாபம், கடமையை செய் போன்ற திரைப்படங்களில் வில்லனாக நடித்திருக்கிறார்.
சமீபத்திய இவரது பேட்டியில் இவரது தந்தையை குறித்தும் தனக்கு சினிமா வாய்ப்பு கிடைத்த அனுபவங்களையும் குறித்து பேசியிருக்கிறார். எனது அப்பா எனக்கு சொல்லிக் கொடுத்த மிக நல்ல பழக்கங்களில் ஒன்று படிப்பை எப்போதும் விடக்கூடாது என்றுதான். இதனாலே படித்து முடித்த பின்பு தான் நான் சினிமாவில் நுழைந்தேன். கதாநாயகனாக வேண்டும் என்று முயற்சி செய்து பின்பு வில்லன் நடிகராக மாறிவிட்டேன் என்று கூறியிருக்கிறார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.