மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
முகமூடி பூஜா ஹெக்டே, நடிகை சமந்தாவிடம் மன்னிப்பு கேட்டே ஆகவேண்டும்! கொந்தளித்த ரசிகர்கள்! ஏன் தெரியுமா?
தமிழ் சினிமாவில் முகமூடி என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகை பூஜா ஹெக்டே. அவர் தற்போது தெலுங்கு, இந்தி என பல மொழிகளில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து பெருமளவில் பிரபலம் அடைந்துள்ளார்.
இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் எப்பொழுதும் பிசியாக இருக்கும் பூஜா ஹெக்டேவின் இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் சமந்தாவின் புகைப்படம் ஒன்று வெளியிடப்பட்டு அதில் சமந்தா பார்ப்பதற்கு அவ்வளவு அழகாக ஒன்றும் இல்லையே என பதிவிடப்பட்டிருந்து. இது வைரலான நிலையில், இதனை கண்ட சமந்தாவின் ரசிகர்கள் பொங்கியெழுந்து நடிகை பூஜா ஹெக்டேவிற்கு எதிராக சமூக வலைத்தளங்களில் விமர்சனங்கள் செய்து வந்தனர். மேலும் நடிகை பூஜா, சமந்தாவிடம் மன்னிப்பு கேட்கவேண்டும் என ஹேஷ்டேக்கை உருவாக்கி ட்விட்டரில் ட்ரெண்ட் செய்தனர்.
இந்நிலையில் பூஜா ஹெக்டே தனது ட்விட்டர் பக்கத்தில், தனது இன்ஸ்டாகிராம் பக்கம் ஹேக் செய்யப்பட்டுள்ளது. அதனை மீட்க டிஜிட்டல் டீம் போராடி வருகிறது. எனவே அதிலிருந்து அழைப்புகள் வந்தால் யாரும் ஏற்க வேண்டாம். அந்த கணக்கில் இருந்து யாராவது ஏதேனும் தகவல் கேட்டால் ரசிகர்கள் பதில் அளிக்க வேண்டாமென பதிவிட்டிருந்தார்.
Hi guys, so I’ve been informed by my team that my insta account has been hacked and my digital team is helping me with it. Please do not accept any invitations or pass out any personal information out to the person asking. Thank you.
— Pooja Hegde (@hegdepooja) May 27, 2020
பின்னர் அதனைத் தொடர்ந்து மீண்டும், எனது இன்ஸ்டாகிராம் கணக்கை பாதுகாக்க இப்போது நான் முயன்றுக் கொண்டிருக்கிறேன். உடனடியாக களத்தில் இறங்கி உதவிய எனது தொழில்நுட்ப குழுவுக்கு நன்றி. இறுதியாக, எனது இன்ஸ்டாகிராம் கணக்கை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துவிட்டேன். கடந்த சில மணி நேரங்களுக்கு முன்பு எனது இன்ஸ்டாகிராம் கணக்கில் இருந்து பகிரப்பட்ட மற்றும் இயக்கப்பட்ட அனைத்து தகவல்களும் நீக்கப்படுகின்றன என்று தனது டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.
Spent the last hour stressing about the safety of my Instagram account. Thanking my technical team for instant help at this hour. Finally, got my hands back on my Instagram 🥰 Any message, follow back or post in d past hour from my account has been done will be undone. Ty.
— Pooja Hegde (@hegdepooja) May 27, 2020