மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அடேங்கப்பா... ஒரு மாத சுற்று பயணம் மேற்கொள்ளும் பீஸ்ட் பட நடிகை... இத்தனை இடங்களுக்கு செல்கிறாரா... அவரே கூறிய பதிவு...
தமிழில் நடிகர் ஜீவா நடிப்பில் வெளிவந்த முகமூடி என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகை பூஜா ஹெக்டே. அவரின் முதல் படமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறவில்லை. அதனையடுத்து நடிகை பூஜா ஹெக்டே தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளிலும் ஏராளமான திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான பீஸ்ட், ராதே ஷ்யாம், ஆச்சார்யா ஆகிய படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறாமல் தோல்வி ஆனதால் பூஜா ஹெக்டே கெரியரில் சறுக்கல் தான் ஏற்பட்டு இருக்கிறது.
இந்நிலையில் தற்போது பூஜா ஹெக்டே ஒரு நீண்ட சுற்றுலாவுக்காக வெளிநாட்டுக்கு கிளம்பி இருக்கிறார். அவர் ஒரு மாதத்தில் மூன்று கண்டங்கள் மற்றும் நான்கு நகரங்களுக்கு செல்ல போவதாக குறிப்பிட்டு இன்ஸ்டாகிராமில் போட்டோ பதிவிட்டு இருக்கிறார்.