96 பட குட்டி ஜானு.. பயங்கரமான வளர்ச்சியா இருக்கே.?! சமீபத்திய போட்டோ.. கிறங்கிப்போன ரசிகர்கள்.!
பொதுமேடையில் தன் மேலே கை வைத்த நபர்! கடுப்பாகி நடிகை பூர்ணா செய்த காரியம்! வைரல் வீடியோ!!
நடிகை பூர்ணா டிவி நிகழ்ச்சி ஒன்றில் தன் மீது கை வைத்து பேசிய போட்டியாளரை கோபமாக திட்டிவிட்டு வெளியேறி சென்ற வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழில் முனியாண்டி விலங்கியல் மூன்றாம் ஆண்டு என்ற படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமாகி இருந்தவர் நடிகை பூர்ணா. கேரளாவை சேர்ந்த இவரது இயற்பெயர் ஷாம்னா காசிம். இவர் முதலில் கடந்த 2004ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளிவந்த ‘மஞ்சு போலொரு பெண்குட்டி’ என்ற படத்தில் நடித்ததன் மூலம் சினிமாவில் நுழைந்தார்.
நடிகை பூர்ணா தமிழில் கந்த கோட்டை, ஆடுபுலி, ஜன்னல் ஓரம், தகராறு, மணல் கயிறு 2, சவரக்கத்தி,கொடி வீரன், காப்பான் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இடையில் அவருக்கு பட வாய்ப்புகள் எதுவும் பெருமளவில் அமையவில்லை.
இந்த நிலையில் அவர் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் நடுவராக பங்கேற்று வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் அவர் நிகழ்ச்சி ஒன்றில் பேசிக்கொண்டிருந்த போது போட்டியாளரான இம்மானுவேல் என்பவர் பூர்ணாவின் தோலில் கைவைத்து பேசியுள்ளார். இதை எதிர்பாராத பூர்ணா டக்கென அவரது கையை உதறிவிட்டு ‘என்ன இதெல்லாம், என்ன செய்கிறாய், எப்படி நீ என்னை தொடலாம் என்று கோபமாக பேசிவிட்டு மேடையை விட்டு சென்றுள்ளார். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.