போக்கிரி படத்திற்கு பிறகு பிரபுதேவாவுடன் மீண்டும் இணையும் பிரபல நடிகர்! யார் தெரியுமா?



Prabu deva joins with Bollywood super star salman khan

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் பிரபு தேவா. பல்வேறு தமிழ் படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார். மேலும் இவர் பிரபல நடன இயக்குனரும் கூட. அதேபோல தமிழ், ஹிந்தி சினிமா என கலக்கிய பிரபல நடிகர். அவரது நடனம் என்றாலே இன்னும் பலருக்கும் எனர்ஜி தான்.

நடிப்பு, நடனம் இவற்றையும் தாண்டி இவர் மிகவும் வெற்றிகரமான இயக்குனரும் கூட. பிரபு தேவா நடிகர் விஜய்யை வைத்து போக்கிரி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர். போக்கிரி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று மாபெரும் வெற்றியும் பெற்றது.

prabudeva

தமிழில் போக்கிரி படம் மாபெரும் வெற்றி பெற்றதை அடுத்து, போக்கிரி படத்தின் ஹிந்தி ரீமேக்கை பிரபல பாலிவுட் நடிகர் சல்மான்கானை வைத்து இயக்கினார் பிரபுதேவா. அந்த படம் ரசிகர்கள் மத்தியில் மிகப் பெரிய வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் சல்மான் கானும் பிரபு தேவாவும் மீண்டும் ஒரு படத்தில் இணையுவுள்ளனர். தபாங் படத்தின் மூன்றாம் பாகமாக உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் தொடங்கியது. இதனை சல்மான்கான் தனது டுவிட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.