பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
ஆமா.. அது உண்மைதான்.! செம ஹேப்பியில் இருக்கும் நடிகர் பிரபுதேவா.! என்ன காரணம் தெரியுமா??
தென்னிந்திய சினிமாவில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகராக வலம் வந்து ரசிகர்களை கவர்ந்தவர் நடிகர் பிரபுதேவா. திரையுலகின் முன்னணி நடன இயக்குனரான அவர் பல திரைப்படங்களை இயக்கியும், தயாரித்தும் வருகிறார். ஏராளமான ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டிருக்கும் பிரபுதேவா கடந்த 1995ம் ஆண்டு ராம்லதா என்பவரைத் திருமணம் செய்து கொண்டார்.
இந்த தம்பதிகளுக்கு 3 மகன்கள் இருந்தனர். இவர்களில் மூத்த மகன் விஷால் 12 வயதில் காலமானார். இந்த நிலையில் திருமணமாகி 15 ஆண்டுகளில் பிரபுதேவா மனைவியை விவாகரத்து செய்தார். பின் நடிகை நயன்தாராவை காதலித்து திருமணம் வரை சென்றார். ஆனால் அவரது முதல் மனைவி செய்த பிரச்சினையால் நயன்தாரா அவரை விட்டு பிரிந்தார். இந்த நிலையில் தனியாக வாழ்ந்து வந்த பிரபுதேவாவிற்கு முதுகு வலிக்கு சிகிச்சை எடுத்த போது மருத்துவரும், உறவினருமான ஹிமானி சிங் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
பின் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளனர். இந்த நிலையில் அண்மையில் 50 வயதாகும் நடிகர் பிரபுதேவாவிற்கு பெண் குழந்தை பிறந்ததாக தகவல்கள் பரவியது. இந்நிலையில் இதுகுறித்து பிரபுதேவா கூறுகையில், நீங்கள் கேள்விப்பட்டது உண்மைதான். இந்த வயதில் நான் மீண்டும் தந்தையாகியுள்ளேன். ரொம்ப சந்தோஷமாக உள்ளது. எனது வேலைப்பளுவை ஏற்கனவே குறைத்துவிட்டேன். மகளுடன் நேரம் செலவிடபோவதாக அவர் கூறியுள்ளார்.