"சர்ச்சை ட்வீட்டால் நெட்டிசன்களிடம் மாட்டி முழிக்கும் பிரகாஷ்ராஜ்.! காரணம் என்ன.?



Prakash Raj controversy twit about chandrayan

தென்னிந்திய மொழித் திரைப்படங்களில் சிறந்த குணச்சித்திர நடிகராகவும்,வில்லன் கதாப்பாத்திரத்திலும் நடித்துபி பெயர் பெற்ற நடிகர் பிரகாஷ் ராஜ். கர்நாடகாவைச் சேர்ந்த இவர் சமூகப் பிரச்சனைகளுக்காக குரல் கொடுத்து வருகிறார்.

Prakash

பிரதமர் மோடியைப் பற்றியும், பாஜக அரசின் செயல்பாடுகள் பற்றியும் கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். இந்துத்துவா அமைப்புகளை பற்றியும், அவர்களது கொள்கைகள் பற்றியும் பொதுமேடைகளில் தாக்கிப் பேசி வருகிறார்.

தற்போது, இந்தியாவின் கனவுத் திட்டமான சந்திராயன்-3 , நிலவை நெருங்கி வெற்றியை நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கும் நிலையில், பிரகாஷ் ராஜ் அதை ட்ரோல் செய்யும் வகையில் போட்ட டுவீட் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

Prakash

இதுகுறித்து பிரகாஷ்ராஜ் தனது டிவிட்டர் பக்கத்தில்,"விக்ரம் லேண்டர் அனுப்பிய முதல் புகைப்படம் என்று ஒருவர் டீ ஆற்றும் புகைப்படத்தைப் பதிவிட்டுள்ளார். இது பிரதமர் மோடியை சந்திராயனோடு ஒப்பிட்டு கிண்டலடித்தது தவறு என்று நெட்டிசன்கள் இவரை திட்டி கமெண்ட் செய்து வருகின்றனர்.