மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
செம.. ஃபுல் ஜாலியாக சிவகார்த்திகேயன் கொடுத்த பிரைவேட் பார்ட்டி! எப்படி இருக்குனு பார்த்தீங்களா! இணையத்தை கலக்கும் வீடியோ!!
சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஏராளமான ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டு, தற்போது முன்னணி நடிகராக வலம் வரும் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாக்கியுள்ள திரைப்படம் டான். இப்படத்தை அறிமுக இயக்குனர் சிபி சக்ரவர்த்தி இயக்கியுள்ளார். இவர் இதற்கு முன்பு அட்லீயிடம் இணை இயக்குனராகப் பணியாற்றியுள்ளார். இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக, ஹீரோயினாக பிரியங்கா மோகன் நடித்துள்ளார்.
மேலும் கல்லூரி கதையை மையமாகக் கொண்ட இப்படத்தில் எஸ்ஜே சூர்யா, சமுத்திரகனி, சூரி, பாலசரவணன், ஷிவாங்கி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். டான் படம் மே 13ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. லைக்கா ப்ரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ள இந்த படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிடுகிறது.
இந்நிலையில் டான் படத்தில் இடம்பெற்ற இரு பாடல்கள் ஏற்கனவே வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்று வரும் நிலையில் தற்போது மூன்றாவது பாடலான பிரைவேட் பார்ட்டி வெளியாகியுள்ளது. சிவகார்த்திகேயன் எழுதியுள்ள இந்த பாடலை அனிருத் மற்றும் ஜோனிடா காந்தி இணைந்து பாடியுள்ளனர். இந்த பாடலில் சிவகார்த்திகேயன் மற்றும் பிரியங்கா மோகன் செம ஜாலியாக குத்தாட்டம் போட்டுள்ளனர். அந்த வீடியோ வைரலாகி வருகிறது.