மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
"லியோ படத்தில் நடிக்க பிரியா ஆனந்திற்கு இத்தனை லட்சம் சம்பளமா.?"
2009ஆம் ஆண்டு "வாமனன்" படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் பிரியா ஆனந்த். இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் ஹிந்தி மொழிப் படங்களில் நடித்து வருகிறார். தமிழில் 180, எதிர் நீச்சல், வணக்கம் சென்னை, அரிமா நம்பி, இரும்புக்குதிரை ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்தாலும், பிரியா ஆனந்த் இன்னும் வளர்ந்து வரும் நடிகையாக தான் உள்ளார். ஒரு படத்தில் நடிக்க இவருக்கு 1 முதல் 2 கோடிகள் வரை சம்பளமாக கொடுக்கப்படுவதாக தெரியவந்துள்ளது.
இந்நிலையில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து சமீபத்தில் வெளியான "லியோ" திரைப்படத்தில் கோலிவுட் மற்றும் பாலிவுட்டை சேர்ந்த பல பிரபலங்கள் நடித்த நிலையில், பிரியா ஆனந்தும் ஒரு சிறிய கேரக்டரில் நடித்துள்ளார்.
மிகச்சிறிய ஒரு கதாப்பாத்திரத்தில் பிரியா ஆனந்த் நடித்திருந்தாலும், இவருக்கு சம்பளமாக மிகப்பெரிய தொகை தரப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. லியோ படத்தில் பிரியா ஆனந்திற்கு கிட்டத்தட்ட ஐம்பது லட்சம் சம்பளமாகத் தருவதாகத் தெரிகிறது.