மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
"சினிமாவைத் தாண்டி பல துறைகளிலும் அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனை இருக்கிறது!" பிரியா பவானி ஷங்கர்!
செய்தி வாசிப்பாளராக சின்னத்திரையில் கால்தடம் பதித்தவர் பிரியா பவானி ஷங்கர். மேலும் நிகழ்ச்சித் தொகுப்பாளராகவும் இருந்த இவர், "கல்யாணம் முதல் காதல் வரை" என்ற தொலைக்காட்சித் தொடரில் நடிகையாகவும் அறிமுகமானார்.
இதையடுத்து 2017ம் ஆண்டு "மேயாத மான்" திரைப்படத்தின் மூலம் வெள்ளித்திரையில் அறிமுகமானார். இவரது முதல் படமே நல்ல வரவேற்பைப் பெற்றது, எனவே தொடர்ந்து இவருக்கு கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர், கசட தபற, ஓ மனப் பெண்ணே உள்ளிட்ட பல வாய்ப்புகள் வந்தன.
தற்போது "லியன்ஸ் டைனர்" என்ற ஹோட்டலை சென்னையில் திறந்துள்ளார் பிரியா பவானி ஷங்கர். இந்நிலையில் ஒரு பேட்டியில் பேசிய இவர், "சினிமாவைத் தாண்டி பல துறைகளிலும் அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனை இருக்கிறது. பாதிப்புக்குள்ளான பெண்கள் தைரியமாக பேச முன்வர வேண்டும்.
அவர்கள் கூறுவதை இந்த உலகமும் காது கொடுத்து கேட்க வேண்டும். அதை விடுத்து அவர்கள் மீதே பழி போடக்கூடாது. நீ ஏன் இதை முன்னமே சொல்லவில்லை. வளர்ந்த பிறகு ஏன் சொல்கிறாய்? நீ ஏன் ஒத்துக்கொண்டாய்? என்று பெண்களைத்தான் கேள்வி கேட்கிறார்கள்" என்று கூறியிருக்கிறார்.