மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ஜவான் திரைப்படத்தில் ஷாருக்கானுடன் அந்த மாதிரி நடிக்க ப்ரியாமணிக்கு சம்பளம் எவ்வளவு தெரியுமா.?
தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக வலம் வருபவர் பிரியாமணி. இவர் தனது நடிப்பு திறமையின் மூலம் ரசிகர்களின் மனதை கவர்ந்து தமிழ் சினிமாவில் தனக்கென தனி இடத்தை தக்க வைத்துள்ளார். முதன் முதலில் தமிழில் 'கண்களால் கைது செய்' திரைப்படத்தில் நடித்து அறிமுகமானார்.
பல திரைப்படங்களில் நடித்திருந்தாலும் கார்த்தி நடிப்பில் வெளியான 'பருத்திவீரன்' திரைப்படத்தின் மூலமே பிரபலமான நடிகையாக அறியப்பட்டு வந்தார். இதன் பின்பு பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடித்து வந்த பிரியாமணி சமீப காலமாக திரைப்படங்களில் எதுவும் நடிக்காமல் பிரேக் எடுத்துள்ளார்.
தற்போது அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நயன்தாரா நடிப்பில் வெளியாக இருக்கும் 'ஜவான்' திரைப்படத்தில் ஷாருக்கானுடன் ஒரு பாடலின் கவர்ச்சி நடனம் ஆடுவதற்காக பிரியாமணி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு பிரியாமணி திரைப்படங்களில் கவர்ச்சி நடனமாட இருப்பது இதுவே முதல் முறையாகும். மேலும் இந்த பாடலில் நடனமாட மட்டுமே ப்ரியாமணிக்கு சம்பளமாக ஒரு கோடி அளவிற்கு கொடுக்கப்பட்ட தகவல் வெளியாகி உள்ளது. இச்செய்தி இணையத்தில் வெளியாகி ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.