மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பிரியங்கா சோப்ராவிற்கு இப்படியொரு வினோத ஆசையா? அதுவும் அந்த கதாபாத்திரத்தில்..செம ஷாக்கான ரசிகர்கள்!!
தமிழ் சினிமாவில் விஜயுடன் இணைந்து தமிழன் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகை பிரியங்கா சோப்ரா. இவர் பாலிவுட் சினிமாவில் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும் அவர் தற்போது ஹாலிவுட் படத்தில் நடிப்பதற்கும் அதிகளவில் கவனம் செலுத்தி வருகிறார்.
ஹாலிவுட் சினிமாவில் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான திரைப்படம் ஜேம்ஸ் பாண்ட். இப்படத்தில் நடித்தவர் பிரபல நடிகர் டேனியல் கிரேக். அவர் தற்போது நோட் டைம் டுடே என்ற தனது 25 வது படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் அவர் இதற்கு மேல் தான் ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரத்தில் நடிக்க மாட்டேன் என கூறியுள்ளார்.
மேலும் நான்கு முறை ஜேம்ஸ்பாண்டாக நடித்திருந்த பியர்ஸ் ப்ரோஸ்னன் இனி ஜேம்ஸ்பாண்ட் கதாபாத்திரத்தில் பெண்கள் தான் நடிக்க வேண்டும் எனவும் கூறியிருந்தார். இதனை தொடர்ந்து அந்த கதாபாத்திரத்தில் நடிக்க நடிகை லஷானா லின்ச் தேர்வு செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளிவந்தது.
இந்நிலையில் நடிகை பிரியங்கா சோப்ரா ஜேம்ஸ்பாண்ட் கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என்பது எனது நீண்ட கால ஆசை. அத்தகைய கதாபாத்திரத்திற்கு நான் மிகவும் பொருத்தமாக இருப்பேன். மேலும் ஜேம்ஸ்பாண்ட் கதாபாத்திரத்தில் நடித்த முதல் நடிகை என்ற பெருமையும் எனக்கு கிடைக்கும். அந்த வாய்ப்பு கிடைத்தால் நான் மிகவும் சந்தோஷப்படுவேன் என கூறியுள்ளார்.