மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
குழந்தை பெற்றுக்கொள்ள போவது எப்போது! ப்ரியங்கா சோப்ரா ஓபன் டாக்
பாலிவுட் நடிகை ப்ரியங்கா சோப்ராதன்னை விட 10 வயது சிறியவரான அமெரிக்க பாடகர் நிக் ஜோனஸை கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு அவர் கணவருடன் அமெரிக்காவில் வசித்து வருகிறார்.
இந்நிலையில் அவர் நிக் ஜோனஸின் 27வது பிறந்தநாளையொட்டி ஒரு அழகான வீடியோவை சமூக வலைதளத்தில் வெளியிட்டு வாழ்த்து தெரிவித்தார்.
தற்போது பிரியங்கா சோப்ரா நடித்துள்ள The Sky Is Pink படத்தை அண்மையில் டொராண்டோ திரைப்பட விழாவில் திரையிட்டனர். அப்போது ப்ரியங்காவிடம் எப்போது குழந்தை பெற்றுக்கொள்வீர்கள் என கேட்டனர்.
அதற்கு பதிலளித்த ப்ரியங்கா "நிச்சயமாக கடவுள் எங்களை ஆசிர்வதித்தால் விரைவில் நடக்கும்’ என்றார். மேலும் பேசிய அவர், அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் வீடு ஒன்றை வாங்கவேண்டும் அடுத்தது ஒரு குழந்தை பெற்றுக்கொள்ளவேண்டும் இது இரண்டும் தற்போது செய்யவேண்டிய பட்டியலில் இருக்கிறது என கூறியிருந்தார்.