மக்கள் கூட்டம் நிறைந்த நடு ரோட்டில் அமர்ந்து கொண்டு தொகுப்பாளினி பிரியங்கா என்ன செய்துள்ளார் என்று பாருங்கள்... வைரலாகும் வீடியோ!!
விஜய் டிவியில் ஏராளமான சூப்பர் ஹிட் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி பிரபல தொகுப்பாளினியாக இருப்பவர் பிரியங்கா. இவரின் கலகலப்பான பேச்சு மற்றும் சிரிப்புக்கு என்றே ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். மேலும் பிரியங்கா விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் போட்டியாளராகவும் கலந்துக்கொண்டார்.
பிரியங்கா பிக்பாஸ் நிகழ்ச்சியின் இறுதி வரை சென்று இரண்டாவது இடத்தை பிடித்தார். இந்நிலையில் தற்போது சூப்பர் சிங்கர் மற்றும் உ சொல்றியா உ உம் சொல்றியா என இரு நிகழ்ச்சிகளை மாகாபாவுடன் இணைந்து தொகுத்து வழங்கி வருகிறார்.
இந்நிலையில் சமூக வலைத்தளத்தில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் பிரியங்கா அவ்வப்போது புகைப்படம் மற்றும் வீடியோகளை வெளியிடுவார் அது ரசிகர்கள் மத்தியில் வைரலாகும். அந்த வகையில் தற்போது மக்கள் கூட்டம் அதிகம் நிறைந்த வெளிநாட்டில் நடுரோட்டில் அமர்ந்தவாறு வீடியோ வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.