#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
₹.6.10 கோடி மோசடியில் ஈடுபட்ட அதர்வா.. பிரபல தயாரிப்பாளர் பரபரப்பு குற்றச்சாட்டு.!
தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக இருப்பவர் அதர்வா. கிராமத்து கதைகளில் கச்சிதமாக நடித்து ரசிகர்களுடைய பிரபலமானவர். சமீபத்தில் இவருடைய நடிப்பில், பிரசாத் முருகேசன் இயக்கத்தில் வெளியான 'மத்தகம்' வெப் சீரிஸ் ரசிகர்களுடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இந்த நிலையில் நடிகர் அதர்வா ரூ.6.10 கோடி மோசடி செய்ததாக பிரபல தயாரிப்பாளர் மதியழகன் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் மனு அளித்துள்ளார்.
அந்த புகார் மனுவில் என்னுடைய படத்தின் நஷ்டத்தை ஈடு கட்டாமலும், பணத்தை திருப்பி தராமலும் கடந்த 4 ஆண்டுகளுக்கும் மேலாக இழுத்தடிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
அதுமட்டுமில்லாமல் அரசியல்வாதிகளை வைத்து தன்னை மிரட்டுவதாகவும் புகார் மனுவில் தெரிவித்துள்ளார். அதன் காரணமாக தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் நடிகர் அதர்வாவிற்கு ரெக்கார்டு வழங்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.