பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
வினாடிகளில் விளம்பரம்.! 5 கோடி சம்பளம்.! நயன்தாராவை திட்டி தீர்க்கும் தயாரிப்பாளர்கள்.!?
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்து வருபவர் நயன்தாரா. இவர் முதன்முதலில் தமிழில் 'ஐயா' திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். இப்படத்திற்கு பின்பு ரஜினி, விஜய், அஜித் என பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து ரசிகர்களின் மனதை கொள்ளையடித்தார்.
தனது நடிப்பு திறமையின் மூலம் தமிழ் சினிமாவில் தனக்கென தனி இடத்தை நிலை நாட்டி லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா எனும் பெயர் பெற்றார். 90களில் ஆரம்பங்களில் இருந்து கதாநாயகியாக நடித்து வரும் நயன்தாரா, தற்போது வரை தொடர்ந்து தமிழ் சினிமாவில் நடித்த பல ஹிட் திரைப்படங்களை அளித்துள்ளார். தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம், ஹிந்தி போன்ற பல மொழிகளிலும் நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார்.
தற்போது கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் தரும் திரை கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து பெண் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்துள்ளார். இவ்வாறு சினிமாவில் உச்சத்தில் இருக்கும்போதே இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரு ஆண் குழந்தைகள் இருந்து வருகின்றனர்.
சமீபத்தில் நயன்தாரா நடிக்கும் திரைப்படங்கள் தொடர் தோல்வியை அடைந்து வருவதால் தமிழ் திரை துறையில் இவருக்கு பட வாய்ப்புகள் குறைந்து வருகின்றன. இதனை அடுத்து தற்போது விளம்பர படங்களில் நடித்து வருகிறார். மேலும் இவர் 50 வினாடிகளில் ஒரு விளம்பர படத்தில் நடிக்க 5 கோடி வரை சம்பளம் வாங்கியிருக்கிறார். இந்த விஷயம் இணையத்தில் வைரலாகி தயாரிப்பாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.