மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ப்ராஜெக்ட் கே படத்தில் தீபிகா படுகோன் இப்படியா இருப்பாங்க?; அட்டகாசமான போட்டோவை வெளியிட்ட படக்குழு.!
வைஜெயந்தி மூவிஸ் நிறுவன தயாரிப்பில், அஸ்வின் இயக்கத்தில், சந்தோஷ் நாராயணன் இசையில், அறிவியல் புனைகதை திரைப்படமாக உருவாகவுள்ளது ப்ராஜக்ட் கே (Project K).
விஷ்ணுவின் 10வது அவதாரமாக கருதப்படும் கல்வி அவதாரத்தை மையமாக கொண்டு திரைப்படம் உருவாகவுள்ளது என்றும், படம் 2024ம் ஆண்டு வெளியாகலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
படத்தில் நாயகனாக பிரபாஸ் நடிக்கிறார். ரூ.600 கோடி பட்ஜெட்டில் உருவாகவுள்ள திரைப்படத்தில் பிரபாஸ், அமிதாப் பச்சன், கமல்ஹாசன், தீபிகா படுகோன், திஷா பதானி, சூர்யா உட்பட பலரும் நடிக்கவுள்ளனர்.
படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி உட்பட பல மொழிகளில் வெளியாகிறது. இந்நிலையில், படத்தில் தீபிகா படுகோனின் புகைப்படம் படக்குழுவால் வெளியிடப்பட்டுள்ளது.
Here is the Firstlook of #DeepikaPadukone from Team #ProjectK
— Vyjayanthi Films (@MoviesM2v) July 17, 2023
A Glorify-ing Glimpse On July 20th 🩸🧭 pic.twitter.com/HM0Zu3xsmZ