மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
திருமணத்திற்கு பிறகு விஜய் டிவி புகழ் வெளியிட்ட முதல் பதிவு! என்ன கூறியுள்ளார் பார்த்தீங்களா!!
பிரபல விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக களமிறங்கி மக்களை கவர்ந்து பெருமளவில் பிரபலமானவர் புகழ். குக் வித் கோமாளி சீசன் 2 மூலம் பிரபலமடைந்த அவருக்கு படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அவர் அஜித், சூர்யா, சந்தானம் போன்ற முன்னணி நட்சத்திரங்களின் படங்களில் நடித்துள்ளார். அவர் zoo keeper என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாகிறார்.
புகழ் பென்சி என்பவரை கடந்த 5 ஆண்டுகளாக காதலித்து வந்தார். இருவரும் ஒன்றாக இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி இருவருக்கும் விரைவில் திருமணம் எனவும் தகவல்கள் பரவியது. இந்நிலையில் அண்மையில் புகழ் மற்றும் பென்ஸிக்கு மிகவும் எளிமையான முறையில் திருமணம் நடைபெற்றது. அந்த புகைப்படம் இணையத்தில் வைரலான நிலையில் பலரும் அவருக்கு வாழ்த்துக் கூறி வருகின்றனர்.
எங்கள் திருமணத்திற்கு வாழ்த்திய அனைத்து திரையுலக/தொலைக்காட்சி நண்பர்கள், ஊடக நண்பர்கள், உறவினர்கள்,நலன்விரும்பிகள் மற்றும் என் உயர்வுக்கு ஏணியாய் இருந்து உதவும் என் உயிர் ரசிகர் பெருமக்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்🙏🏻நெகிழ்ச்சியும் மகிழ்ச்சியும்!❤️ pic.twitter.com/qodfJHIbEl
— vijaytvpugazh_official (@VijaytvpugazhO) September 2, 2022
இந்நிலையில் திருமணத்திற்கு பிறகு புகழ் டுவிட்டரில் முதல் முதலாக பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர், திரையுலக/தொலைக்காட்சி நண்பர்கள், ஊடக நண்பர்கள், உறவினர்கள், நலன்விரும்பிகள் மற்றும் என் உயர்வுக்கு ஏணியாய் இருந்து உதவும் என் உயிர் ரசிகர் பெருமக்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள் நெகிழ்ச்சியும் மகிழ்ச்சியும் என பதிவிட்டுள்ளார். அந்த பதிவு வைரலாகி வருகிறது.