மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
"என் கையில் தூக்கிய முதல் மகளே..." குக் வித் கோமாளி பிரபலத்துக்கு நெகிழ்வுடன் வாழ்த்து செய்தி தெரிவித்த புகழ்.!
குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் புகழ்பெற்றவர் நடிகர் புகழ். குக் வித் கோமாளியின் மூலம் சின்னத்திரையில் அறிமுகமான இவர் தற்போது திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். இவர் சசிகுமாருடன் இணைந்து நடித்த அயோத்தி என்ற திரைப்படம் மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது.
இந்த நிகழ்ச்சியின் முதல் சீசனில் இருந்தே புகழும் சிவாங்கியும் அண்ணன் தங்கைகளாக பழகி வருகின்றனர். இவர்களது உறவு கடந்த மூன்று சீசன்களையும் தாண்டி நான்காவது சீசனிலும் தொடர்கிறது.
இந்த ஆண்டு சிவாங்கியின் பிறந்த நாளை சிறப்பிக்கும் வகையில் அவருக்கு வாழ்த்து கூறி சமூக வலைதளமான ட்விட்டரில் புகைப்படம் ஒன்றை பகிர்ந்து இருக்கிறார் புகழ். அந்தப் புகைப்படத்துடன் அவர் பகிர்ந்திருக்கும் செய்தி ரசிகர்களை நெகிழச் செய்திருக்கிறது.
என் கையில் தூக்கிய முதல் மகள் இவள் ❣️இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் என் தங்கமே ✨ @sivaangi_k pic.twitter.com/T2gJpYta2C
— vijaytvpugazh_official (@VijaytvpugazhO) May 25, 2023
சிவாங்கிக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறியிருக்கும் அவர் "சிவாங்கியை கையில் தூக்கி வைத்தவாறு இருக்கும் புகைப்படத்தினை பகிர்ந்துள்ளார். அந்தப் புகைப்படத்துடன் என் கையில் தூக்கிய முதல் மகள் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் என வாழ்த்தி செய்தியையும் பதிவு செய்து இருக்கிறார். இது சின்னத்திரை ரசிகர்களின் மனதை நெகிழச் செய்திருக்கிறது.