மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
புஷ்பா 2 படத்தின் டீஸர் எப்போது ரிலீஸ்? படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
கடந்த 2021 ஆம் ஆண்டு இந்திய அளவில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்ற படம் புஷ்பா. இந்த திரைப்படத்தில் அல்லு அர்ஜுன் ராஷ்மிகா மந்தனா, ஃபகத் ஃபசில் மற்றும் சுனில் ஆகியோர் நடித்திருந்தனர். இந்தப் படமானது தெலுங்கு மட்டுமல்லாத இந்திய அளவிலும் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.
இந்தப் படத்தின் முதல் பாகத்தில் அல்லு அர்ஜுன் வித்தியாசமான ஸ்டைலுடன் கூடிய தாதாவாக நடித்திருந்தார். இந்த ஸ்டைல் சினிமா ரசிகர்கள் மட்டுமல்லாது கிரிக்கெட் வீரர்கள் மற்றும் பிரபலங்கள் என எல்லோரிடமும் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.
இந்தத் திரைப்படத்தின் இரண்டாம் பாகமான புஷ்பா தி ரூல் கடந்த ஆண்டு முதல் படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்று வந்த நிலையில், தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. முதல் பாகத்தை விட இரண்டாம் பாகம் மிக பிரம்மாண்டமாக உருவாக்கி வருவதாக கூறப்படுகிறது.
இதனிடையே கடந்த ஆண்டு புஷ்பா 2 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், இப்படத்தின் டீசர் வரும் ஏப்ரல் 8ம் தேதி வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.