அம்மாடியோவ் இவ்வளவா.? அப்செட்டான குக் வித் கோமாளி வெங்கடேஷ் பட்.? என்னனு தெரிஞ்சா அதிர்ந்து போவீங்க!



qureshi-damaged-venkatesh-bhat-80-thousand-rupees-shoe

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும்  நிகழ்ச்சிகளில் மக்களிடம் மிகவும் பிரபலமான நிகழ்ச்சி குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சியின் நான்காவது சீசன் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது செஃப் வெங்கடேஷ் பட் மற்றும் தாமு ஆகியோர் நடுவர்களாக பணியாற்றும் இந்த நிகழ்ச்சியில் பல்வேறு சின்னத்திரை மற்றும்  வெள்ளித்திரையைச் சார்ந்த  நட்சத்திரங்கள் கோமாளிகளாக பங்கேற்று வருகின்றனர்.

சமையலோடு சேர்ந்து கோமாளிகளின் அட்டகாசமான நகைச்சுவையும் இந்த நிகழ்ச்சி ரசிகர்களைச் சென்றடைய ஒரு முக்கியமான காரணமாகும். கடந்த ஜனவரி மாதம் துவங்கிய நான்காவது சீசன் தற்போது முடிவுக்கு வர இருக்கிறது.

venkateshbhat

இந்த நிகழ்ச்சியில் பங்கு பெற்றுள்ள கோமாளிகளில் சின்னத்திரை ரசிகர்களிடம் மிகவும் பிரபலமானவர் குரேஷி. இவர் இந்த நிகழ்ச்சி பற்றி சமீபத்தில் பேட்டி ஒன்று அளித்திருக்கிறார். அந்தப் பேட்டியில் நிகழ்ச்சியில் நடந்த ஒரு சில சுவாரசியமான சம்பவங்களை பகிர்ந்துள்ளார்.

venkateshbhat

அந்தப் பேட்டியில் பேசியிருக்கும் அவர் "குக் வித் கோமாளியின் நடுவர்களில் ஒருவரான வெங்கடேஷ் பட் எப்போதும் திட்டிக் கொண்டே இருப்பார். இதனால் கடுப்பான நான்  சமையல் எண்ணெயை அவரது ஷூ வில் கொட்டி விட்டேன்  அப்போது அந்த ஷூவின் விலை 80000 ரூபாய் என்று எனக்குத் தெரியாது. இப்போது அந்த சம்பவத்தை நினைத்தாலும் எனக்கு குற்ற உணர்ச்சியாக இருக்கிறது என தெரிவித்திருக்கிறார். மேலும் அந்த சம்பவத்திற்குப் பிறகு வெங்கடேஷ் பட் இவரை அடி வெளுத்து வாங்கி விட்டாராம்.