தான் இயக்கிய முதல் குறும்படத்திற்கே சர்வதேச விருது! உச்சகட்ட மகிழ்ச்சியில் கபாலி படநடிகை!



radhika-apte-first-shortflim-got-universal-award

தமிழ் சினிமாவில் ஆல் இன் ஆல் அழகுராஜா, கபாலி உள்ளிட்ட படங்களில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகை ராதிகா ஆப்தே. இவர் பாலிவுட் சினிமாவில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக உள்ளார்.

இந்நிலையில் ராதிகா ஆப்தே சமீபத்தில் 'தி ஸ்லீப்  வாக்கர்ஸ்' என்ற குறும்படத்தை இயக்கியிருந்தார். தூக்கத்தில் நடக்கும் பிரச்சினையை மையமாக கொண்டு உருவான இந்த குறும்படத்தில்  சஹானா கோஸ்வாமி, குல்ஷன் தேவையா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.
மேலும் இப்படத்திற்கு அவரது கணவர் பெனிடிக்ட் டெய்லர் இசையமைத்திருந்தார்.

radhika apte

இந்நிலையில் கொரோனா பரவலால் பல நாடுகளிலும் ஊரடங்கு பிறப்பிக்கபட்டிருக்கும் நிலையில் சர்வதேச குறும்பட விழா ஒன்று இணையதளத்தில் நடைபெற்றது. இதில் ராதிகா ஆப்தேவின் குறும்படம் சிறந்த நள்ளிரவு குறும்படத்துக்கான சர்வதேச விருதை வென்றுள்ளது. 

இதனால் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கும்  ராதிகா ஆப்தே இதுகுறித்து கூறுகையில், எனது குறும்படம் சர்வதேச அளவில் விருது பெற்றது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. ஊரடங்கு காரணமாக மக்கள் அனைவரும் வெப் தொடர்களை விரும்பி பார்த்து வருகின்றனர். லண்டனில் தெருக்களில் நான் நடந்து செல்லும்போது என்னை அடையாளம் கண்டுபிடித்து அனைவரும் எனது நடிப்பை பாராட்டுகிறார்கள்” என்று உற்சாகத்துடன் கூறியுள்ளார்.