மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
எனக்கு கணவராக வருபவர் கண்டிப்பா இப்படித்தான் இருக்கணும், அதிரடியாக கண்டிஷன் போட்ட பிரபல நடிகை, யாருப்பா அது?
தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி என பல மொழிகளில் நடித்து முன்னணி நடிகராக இருப்பவர் நடிகை ரகுல் ப்ரீத் சிங். இவர் தமிழில் ‘தீரன் அதிகாரம் ஒன்று’ என்ற படத்தில் கார்த்திக்கிற்கு ஜோடியாக நடித்ததன் மூலம் பிரபலமானவர்.
இவர் சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேட்டி அளித்தார். அப்பொழுது கூறியதாவது, “நான், பஞ்சாபியை சேர்ந்த பெண். எனது அப்பாவுக்கு ராணுவத்தில் வேலை. 2 வருடங்களுக்கு ஒருமுறை அப்பாவுக்கு வேலை மாறிக்கொண்டே இருக்கும். அதனால், நாங்களும் ஊர் மாறிக்கொண்டே இருப்போம் அதனால் நான் இந்தியாவின் பல பகுதிகளில் வாழ்ந்துள்ளேன், இப்போது என் குடும்பம் டெல்லியில் இருக்கிறது. நான், ஐதராபாத்தில் வசித்து வருகிறேன்.
எனக்கு சீக்கிரமே திருமணம் செய்யணும்னு அம்மாவுக்கு ஆசை. என் மூலம் பேரன்-பேத்திகளை பார்க்க வேண்டுமாம். இதற்காகவே விரைவில் என்னை திருமணம் செய்துக்கொக்க கூறி வற்புறுத்துகிறார்.
ஆனால் விரைவில் திருமணம் செய்து கொள்ள நான் யாரையும் காதலிக்கவில்லை. எனக்கு கணவராக வருபவர், 6 அடி உயரம் இருக்க வேண்டும். முக்கியமாக தெலுங்கு பேச தெரிந்து இருக்க வேண்டும்.
எனக்கும், ராணாவுக்கும் காதல் இருப்பதாக சிலர் வதந்தியை பரப்பியிருக்கிறார்கள். ராணா, எனக்கு நல்ல நண்பர். அவருடன் எனக்கு காதல் இல்லை. என ராகுல் ப்ரீத் சிங்க் கூறியுள்ளார்.