மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
வாயை கொடுத்து வம்பில் மாட்டிக்கொண்ட பிரபல நடிகை! ஒரு நடிகை இப்படியா பேசுவது?
நடிகர் கவுதம் கார்த்திக் நடிப்பில் வெளியான என்னமோ ஏதோ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ரகுல் ப்ரீத்சிங். இந்த படம் சரியாக ஓடாததால் இவருக்கு சரியான அங்கீகாரம் கிடைக்கவில்லை.
அதை தொடர்ந்து நடிகை கார்த்தி நடிப்பில் வெளியான தீரன் அத்தியாயம் ஓன்று திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார் ரகுல் ப்ரீத்சிங். இந்த படம் மாபெரும் வெற்றிபெற்றதை தொடர்ந்து இவரது புகழ் தமிழ் சினிமாவில் பரவியது.
தமிழ், தெலுங்கு என மாறி மாறி நடித்துவரும் இவர் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்துவருகிறார். தற்போது மீண்டும் நடிகை கார்த்திக்கு ஜோடியாக தேவ் படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார் ரகுல்.
இந்நிலையில் இவர் சமீபத்தில் சார்ட்ஸ் அணிந்தபடி காரில் இருந்து வெளியில் வரும் போது எடுத்த புகைப்படங்களை வெளியிட்டிருந்தார். அதற்கு கமெண்ட் செய்த ரசிகர் ஒருவர் "இந்த புகைப்படம் அவர் காரில் அந்த மாதிரி தவறாக இருந்துவிட்டு அவசரத்தில் பேன்ட் அணிய மறந்துவிட்டு வெளியில் வரும்போது எடுத்தது" என ரகுல் ப்ரீத்தை கொச்சைப்படுத்தி பேசியிருந்தார்.
எப்போதும் அமைதியாகவே எல்லோருக்கும் தென்படும் ரகுல் ப்ரீத் இந்தமுறை கடுமையாக கோபமடைந்துள்ளார். அந்த ரசிகரின் கமெண்ட்டிற்கு பதிலளித்த ரகுல் ப்ரீத் அந்த ரசிகரின் அம்மாவையே கொச்சைப்படுத்தும் விதமாக மிகவும் மோசமாக விமர்சித்துள்ளார்.
அதில் அவர், "உன் அம்மா இதேபோன்று பலமுறை காரில் இருந்துள்ளார் போலும், அதனால் தான் உனக்கு இதைப்பற்றி நன்கு தெரிந்துள்ளது. உன் அம்மாவிடம் நல்ல புத்திமதியையும், இந்த மாதிரி காரில் நடக்கும் விவரங்களையும் கேட்டு தெரிந்துகொள். இவனைப் போன்ற ஆட்கள் இருக்கும் வரை பெண்களுக்கு பாதுகாப்பே இருக்காது. வெறுமனே சம உரிமை, பெண்கள் பாதுகாப்பு என வாதிடுவதெல்லாம் வீண்" என தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இதனால் பலரும் ரகுல் ப்ரீத் மீது மிகுந்த எர்ச்சலடைந்து அவரை சமூக வலைத்தளங்களில் திட்டி தீர்த்து வருகின்றனர். அவன் பேசியது தவறு என்றால் அவனை மட்டும் திட்ட வேண்டியது தானே, பாவம் அவன் தாய் என்ன பாவம் செயதார்; பெண்கள் பாதுகாப்பு, உரிமை பற்றி பேசியுள்ள உனக்கு அவன் தாயும் ஒரு பெண் தான் என தோன்றவில்லையா?" என சராமாரியாக கேள்விகளை கேட்டு ரகுல் ப்ரீத்தை கலங்கடித்து வருகின்றனர்.
I think your mother does a lot of sessions in the car so you are an expert !! Ask her to give u some sense also besides these session details .. till the time people like this exist women can’t be safe .. just debating about equality and safety won’t help.. #sickmind
— Rakul Preet (@Rakulpreet) January 17, 2019