96 பட குட்டி ஜானு.. பயங்கரமான வளர்ச்சியா இருக்கே.?! சமீபத்திய போட்டோ.. கிறங்கிப்போன ரசிகர்கள்.!
அடக்கடவுளே.. ராஜா ராணி 2 சீரியல் நடிகருக்கு இப்படியொரு நிலையா?.. திடீரென ஏற்பட்ட சோகம்..!!
விஜய் தொலைக்காட்சியில் மக்கள் மத்தியில் வரவேற்பு பெற்று ஒளிபரப்பாகி வரும் தொடர் ராஜா ராணி 2. இயக்குனர் பிரவீன் பென்னட் இயக்கத்தில் குளோபல் வில்லேஜஸ் நிறுவனம் தயாரித்து வரும் இந்த தொடர், ஹிந்தி சீரியலின் ரீமெக்காக தமிழில் எடுக்கப்பட்டுள்ளது.
இதில் முதலில் நாயகியாக ஆலியா மானசா நடித்து வந்த நிலையில், தற்போது நாயகி மாற்றப்பட்டுள்ளார். ரியா என்பவர் சந்தியா கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இவர் தனது காவல்துறை கனவை நிறைவேற்ற தற்போது சென்று கொண்டிருக்கும் நிலையில், பல புதிய கதாபாத்திரங்களும் நடித்து வருகின்றனர்.
இதில் சிறிய அளவிலான கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகர் லோகேஷ் பாஸ்கரன். இவர் சென்னையில் உள்ள அரும்பாக்கத்தில் வசித்து வருகிறார். இந்நிலையில் அரும்பாக்கம் காவல் நிலையத்தில் இவர் அளித்துள்ள புகாரில், "நான் திரைத்துறையில் நடித்து வருகிறேன்.
நானும், எனது நண்பர் ஆம்மாத் சக்கரபாணி என்பவரும் 18ஆம் தேதி இரவு நண்பர் தங்குவதற்காக உள்ள விடுதியை தேடிக்கொண்டிருந்த போது, எனது நண்பர் ஆர்ஆர் பிரியாணி கடை அருகில் ராஜு பார்க் ரெசிடென்சியில் அறை உள்ளதா? என விசாரிக்க சென்றார்.
அப்போது எனது காரை ஹோட்டலின் முன்பு நிறுத்திவிட்டு சென்று வந்த நிலையில், திரும்பி வந்து பார்த்தபோது எனது காரின் பின்புற வலது கண்ணாடி உடைந்திருந்தது. மேலும் ஆமாத்தின் 1.5 லட்சம் மதிப்புள்ள பொருட்களும் திருடப்பட்டது. அதனை கண்டறிந்து தர வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.