மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
இந்திய வரலாற்றில் முதல்முறை.. இரத்ததானம் செய்த கர்ப்பிணி..! லாஜிக்கில் கோட்டை விட்டாரா ராஜா ராணி 2 சீரியல் இயக்குனர்?.. நெட்டிசன்கள் கலாய்.!!
பிரபல தனியார் தொலைக்கட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்ற தொடர் ராஜா ராணி. தற்போது 2-வது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த தொடரில், தொடரின் மாமியாராக இருக்கும் சிவகாமி, நாயகியான மருமகள் சந்தியாவிற்கு பல்வேறு தடையை ஏற்படுத்தி பின்னர் ஐ.பி.எஸ் தேர்வு எழுத அனுமதி வழங்கினார்.
அதனைத்தொடர்ந்து, ஆதி தனது காதலி ஜெர்சியை கர்ப்பமாக்கிய நிலையில், இவர்களின் திருமணம் நடக்குமா? அது எப்படி சாத்தியமாகும் என்ற கோணத்தில் கதை நகர்ந்து வந்தது. இருவரின் திருமணத்திற்கு தடையாக மதம் இருந்தது.
இந்த நிலையில், சிவகாமியின் கணவர் விபத்திற்குள்ளாகி மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்ட நிலையில், அவருக்கு இரத்தம் தேவைப்படுகிறது. அந்த இரத்தத்தை ஜெர்சி வழங்கிய நிலையில், நாயகி சந்தியா இரத்தத்திற்கு மதம் தெரியவில்லை, திருமணத்திற்கு மதம் தடையா? என்று கேள்வி எழுப்புகிறார். இந்த ப்ரமோ காட்சிகள் வைரலாகியுள்ளன.
இதில், இத்தொடரின் இயக்குனர் லாஜிக்கை மறந்துவிட்டதாக நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். அதாவது, கர்ப்பமாக இருக்கும் பெண்மணி இந்திய வரலாற்றில் முதல் முறையாக தனது இரத்தத்தை வழங்குகிறார். அது எப்படி சாத்தியம்?. அவ்வாறு வழங்கலாமா? என்று பல கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.
மேலும், மாமியார் சிவகாமிக்கு தகுந்த பாடம் புகட்ட மாமனாரை விபத்திற்குள்ளாக்கியதே சந்தியாவாகத்தான் இருக்கும் எனவும் நெட்டிசன்கள் இயக்குனரை கலாய்த்து வருகின்றனர்.