பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
ப்பா.. வேற லெவல்! நாட்டுக் கூத்து பாடலுக்கு இயக்குனர் ராஜமவுலி போட்ட செம குத்தாட்டம்! தீயாய் பரவும் வீடியோ!!
பாகுபலி படத்தை இயக்கியதன் மூலம் இந்திய அளவில் பிரபலமானவர் இயக்குனர் ராஜமவுலி. அதனைத் தொடர்ந்து அவர் இயக்கிய பாகுபலி 2 திரைப்படமும் மக்களிடையே மாபெரும் வரவேற்பினைப் பெற்று பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்தது. தெலுங்கு திரையுலகில் முன்னணி பிரம்மாண்ட இயக்குனராக வலம் வரும் ராஜமவுலி இயக்கத்தில் தற்போது வெளிவந்துள்ள திரைப்படம் இரத்தம் ரணம் ரெளத்திரம் ஆர்.ஆர்.ஆர்.
வரலாற்று கதையம்சம் கொண்ட இந்த படத்தில் தெலுங்கு சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களான ராம்சரணும், ஜூனியர் என்.டி.ஆரும் நடித்துள்ளனர். மேலும் அப்படத்தில் சமுத்திரக்கனி, அஜய் தேவ்கன், ஒலிவியா மோரிஸ், ஆலியா பட் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம் உலகம் முழுவதும் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய 5 மொழிகளிலும் கடந்த மாதம் 25-ந் தேதி வெளிவந்தது.
மேலும் ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று, வசூல் சாதனையும் படைத்து வருகிறது. இந்த படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடல் பட்டி தொட்டியெல்லாம் பட்டையைக் கிளப்பி செம ஹிட்டானது. இந்நிலையில் ஆர்.ஆர்.ஆர் படத்தின் சக்சஸ் பார்ட்டி அண்மையில் நடைபெற்றுள்ளது. அதில் இயக்குனர் ராஜமவுலி நாட்டு நாட்டுப் பாடலில் ராம்சரணும், ஜூனியர் என்.டி.ஆரும் போட்ட வைரல் ஸ்டெப்பை ஆடி அசத்தியுள்ளார். அந்த வீடியோ வைரலாகி வருகிறது.