மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
"இன்ட்ரஸ்ட்டிங்..." என்று ரஜினிகாந்த் ரிலீஸ் செய்த 'காவி ஆவி நடுவுல தேவி'.! தயாரிப்பாளர்கள் மகிழ்ச்சி.!
வீசி குகநாதன் எழுத்தில் புகழ் மணி இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் காவி ஆவி நடுவில் தேவி. இந்தத் திரைப்படத்தில் யோகி பாபு கதாநாயகனாக நடித்திருக்கிறார். மேலும் அவருடன் பிரியங்கா, தம்பி ராமையா, ராம சுந்தர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர்.
விரைவில் திரைக்கு வர இருக்கும் இந்த திரைப்படத்தின் டிரைலரை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வெளியிட்டார். இந்த ட்ரெய்லர் வெளியிடும் நிகழ்ச்சி அவரது இல்லத்தில் வைத்து நடைபெற்றது. இந்த விழாவில் பிசி குகநாதன் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவர் எஸ் ராமசாமி ஃபிலிம் சேம்பர் மற்றும் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் செயற்குழு உறுப்பினர் விஜய் முரளி மற்றும் எடிட்டர் ஆகியோர் உடன் இருந்தனர்.
காமெடி கலந்த திகில் படமாக உருவாகி இருக்கும் இந்த திரைப்படத்தின் டிரைலரைக் கண்ட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்ட்ரஸ்டிங் எனக் கூறி பட குழுவினரை வெகுவாக பாராட்டினார். இதனைத் தொடர்ந்து அந்த திரைப்படத்தின் டிரைலரையும் அவர் வெளியிட்டார். படக்குழுவினருக்கு தனது வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.
யோகிபாபு நடித்த காவி ஆவி நடுவுல தேவி படத்தின் டிரெய்லரை சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் வெளியிட்டு உள்ளார்#KaaviAaviNaduvulaDevi #Rajinikanth #Yogibabu pic.twitter.com/8jTxrFDwkt
— Asianetnews Tamil (@AsianetNewsTM) May 30, 2023
சூப்பர் ஸ்டார் ரஜினி அந்த ட்ரெய்லரை வெளியிடும் வீடியோ சமூக வலைதளங்களில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது. படக்குழுவினர் மற்றும் தயாரிப்பாளர் சங்க உறுப்பினர்களுடன் அமர்ந்து ரஜினிகாந்த் இந்த திரைப்படத்தின் டிரைலரை பார்த்துவிட்டு அதனை ரிலீஸ் செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி இருக்கிறது.