திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
அவரது கடைசி ஆசையை விரைவில் நிறைவேற்றுவேன்.! நடிகர் மயில்சாமியின் இறுதி அஞ்சலிக்கு பின் நடிகர் ரஜினி வருத்தம்.!
தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்த மயில்சாமி அவர்கள் நேற்று மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். இவரது மறைவு திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியது. அவரது உடல் இன்று வடபழனியில் மின்மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
அதற்கு முன்னர் நடிகர் மயில்சாமியின் இறுதி ஊர்வலத்தில் முன்னணி நடிகர்கள், ரசிகர்கள் என பலரும் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர். இந்நிலையில் இன்று காலை மயில்சாமியின் இறுதி சடங்கில் கலந்துகொண்டு அவருக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின் செய்தியாளர்களிடம் பேசிய ரஜினிகாந்த் கூறுகையில், மயில்சாமியை எனக்கு இளம்வயதிலிருந்தே தெரியும். எனது நீண்ட கால நண்பர். எம்ஜிஆரின் ரசிகர். தீவிர சிவபக்தர். எனக்கு அவருடன் அதிக படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைக்கவில்லை.
சில நாட்களுக்கு முன்பு கூட என்னிடம் பேச அவர் தொடர்பு கொண்டார். ஆனால் என்னால் அவரிடம் பேச முடியவில்லை. திரையுலகில் விவேக், மயில்சாமி ஆகிய இருவரது இழப்பும் சமூகத்திற்கு நேர்ந்த பெரும் இழப்பு. இருவருமே சமூக அக்கறை கொண்டவர்கள். சிந்தனைவாதிகள். நான் சிவனுக்கு பாலாபிஷேகம் செய்ய வேண்டும் என மயில்சாமி ஆசைப்பட்டதாக கூறினர். அவரது ஆசையை விரைவில் நிறைவேற்றுவேன். சிவன் அவரது சிறந்த பக்தரை அழைத்துச் சென்றுள்ளார். அவரது வாரிசுகள் நல்லபடியாக இருப்பார்கள் என்று கூறியுள்ளார்.