திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
அப்பா பேச்சை கேட்காத மகளுக்கெல்லாம்..; முடிவுக்கு வந்த ராஜ்கிரண் மகளின் காதல் திருமணம்.!
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராகவும், தயாரிப்பாளராகவும், திரைப்பட விநியோகிஸ்தராகவும் வலம்வந்த நடிகர் ராஜ்கிரண், பிரியா என்ற மகளை தத்தெடுத்து வளர்த்து வந்தார். இவர் கடந்த 2022ம் ஆண்டு சின்னத்திரை நடிகரான முனீஷ் ராஜா என்பவரை காதலித்து கரம்பிடித்தார். இந்த திருமண முடிவில் விருப்பம் இல்லாத ராஜ்கிரண், தனது மகளின் முடிவை காரணம் கூறாமல் தவிர்த்தார்.
மேலும், தன்னிடம் உள்ள செல்வங்களுக்கு ஆசைப்பட்ட முனீஷ் இவ்வாறான செயலில் ஈடுபட்டதாகவும் குற்றசாட்டை முன்வைத்து இருந்தார். அச்சமயம் காதல் திருமண ஜோடி தமிழக அளவில் கவனிக்கப்பட்டது. பல தொலைக்காட்சி நிகழ்ச்சி, விவாதங்களில் கலந்துகொண்டது. இந்நிலையில், இன்று ராஜ்கிரண் மகள் பிரியா கண்கலங்கிய வீடியோ ஒன்றை வெளியிட்டு, தங்களின் திருமண வாழ்க்கை முடிந்ததாக கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், "நான் கடந்த 2022ல் பெற்றோரை எதிர்த்து திருமணம் செய்தேன். திருமணத்திற்கு பின்னர் நாங்கள் தற்போது பிரிந்துவிட்டோம். இது சட்டபூர்வமான திருமணம் இல்லை. நான் எனது தந்தையை மிகவும் காயப்படுத்திவிட்டேன். இன்று எனக்கு பிரச்சனை வந்தபோது அவரே என்னை காப்பற்றினார். இதற்கு நான் எத்தனை முறை மன்னிப்பு கேட்டாலும் போதாது" என கூறினார்.