மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
முதல் முறையாக வெளியான நடிகர் ராமராஜனின் மகன் மற்றும் மகள் புகைப்படம்! இதோ!
80 களில் தமிழ் சினிமாவின் முடிசூடா மன்னனாக இருந்தவர் ராமராஜன். கரகாட்டக்காரன் என்ற பிரமாண்ட படைப்பின் கதாநாயகனாக நடித்து தமிழ் ரசிகர்களின் மத்தியில் பிரபலமானார் ராமராஜன். 1977 ஆம் ஆண்டு மீனட்சி குங்குமம் என்ற திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் பல்வேறு முன்னணி நடிகர்களுக்கு கடும் போட்டியாக திகழ்ந்தவர்.
இயக்குனர் கங்கை அமரன் இயக்கத்தில், ராமராஜன் நடிப்பில் வெளியான கரகாட்டக்காரன் திரைப்படம் அதிக நாட்கள் ஒடி சாதனை படைத்த தமிழ் திரைப்படங்களில் ஓன்று. கரகாட்டக்காரன் படம் இன்றுவரை ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக உள்ளது.
இவர் 1987 ஆம் ஆண்டு பிரபல நடிகை நளினியை காதலித்து திருமணம் செய்துகொண்டார். திருமணம் முடிந்து 13 வருடங்கள் கழித்து இவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் விவாகரத்து பெற்றனர். இவர்களுக்கு அருண் என்ற ஒரு மகன் மற்றும் அருணா என்ற ஒரு மகள் உள்ளனர்.
இதுவரை பெரிதாக வெளிவராத இவர்களது புகைப்படம் தற்போது வெளியாகி வைரலாகிவருகிறது. இதோ அந்த புகைப்படம்.