"எனக்கு சினிமாவில் நடிப்பதற்கு சுத்தமாக பிடிக்காது" நடிகை நித்யா மேனன் கூறிய உண்மை....!?
"முதல் மரியாதை படத்தில் இந்த கேரக்டரில் நடிக்க இருந்தது ரம்யா கிருஷ்ணனா.!"
1985ஆம் ஆண்டு பாரதிராஜா இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் "முதல் மரியாதை". இப்படத்தில் சிவாஜி கணேசன் வித்தியாசமான கிராமப்புறக் கதாப்பாத்திரத்தில் நடித்து அசத்தியிருந்தார். இவருக்கு ஜோடியாக கணவரை எப்போதும் நிந்திக்கும் மனைவியாக வடிவுக்கரசி நடித்திருந்தார்.
மேலும் அந்த ஊருக்குப் புதிதாக வரும் சிறிய வயதுப்பெண்ணாக ராதாவும் நடித்திருந்தனர். இவருக்கும், சிவாஜிக்கும் இடையே காதல் மலர்ந்து, ஊராரின் வசவுச் சொற்களை ஏற்று, குடும்ப மானம் காக்க கொலை செய்து சிறைக்கு சென்று விடுவார்.
இப்படி செல்லும் கதையில் இளையராஜாவின் இசையில் அனைத்து பாடல்களும் இன்றும் அனைவராலும் கொண்டாடப்படுகிறது. குறிப்பாக அந்த நிலாவைத்தான் பாடலும், ராசாவே உன்ன நம்பி பாடலும் ரசிகர்களின் எவர்க்ரீன் லிஸ்டில் இன்றும் இருக்கின்றன.
இந்நிலையில், ரம்யா கிருஷ்ணன் ஒரு முறை பாரதிராஜாவிடம் வாய்ப்பு கேட்டதாகவும், அவர் முதல் மரியாதை படத்தில் ரஞ்சனி நடித்த கேரக்டரில் இவரை நடிக்க வைக்க விரும்பியதாகவும், ஆனால் அப்போது ரம்யா கிருஷ்ணன் வேறு படத்தில் நடித்துக் கொண்டிருந்ததால் இதில் நடிக்கவில்லை என்றும் தகவல் வெளியாகியுள்ளது.