மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
"ஏதோ சற்று தூங்கி விட்டேனாம்" வடிவேலு பாணியில் விஜயை கலாய்த்த ராஷ்மிகா..
தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி மொழிப் படங்களில் நடித்து முன்னணி நடிகையாக இருப்பவர் ராஷ்மிகா மந்தனா. 2016ஆம் ஆண்டு "கிரிக் பார்ட்டி" என்ற கன்னடப் படத்தில் தான் இவர் முதன் முதலில் அறிமுகமானார். 2021ஆம் ஆண்டு தமிழில் "சுல்தான்" படத்தில் அறிமுகமானார்.
அதன் பின்னர் 2022ஆம் ஆண்டு விஜயின் "வாரிசு" படத்தில் மீண்டும் தமிழுக்கு வந்தார். ஜீ சினி விருதுகள், சைமா விருதுகள் பலவற்றை பெற்றுள்ளார் ராஷ்மிகா மந்தனா. இந்நிலையில், வாரிசு படத்தில் நடித்த போது ஷூட்டிங் ஸ்பாட்டில் தனக்கு ஏற்பட்ட அனுபவத்தை ராஷ்மிகா கூறியுள்ளார்.
அவர் கூறியது, "வாரிசு ஷூட்டிங் ஒரு நாள் நான் நாற்காலியில் அமர்ந்திருந்தபோது, அருகில் இருந்த அறையில் அப்படியே தலை சாய்த்து தூங்கிவிட்டேன். இதைப் பார்த்து விஜய் சார், இயக்குனரிடம் "ஷூட்டிங் வர்றாங்க, சாப்பிடுறாங்க, தூங்குறாங்க, அப்புறம் போயிடுறாங்க" என்று கலாய்த்திருக்கிறார்.
எனக்கு வாரிசு படத்தில் பெரிய ஸ்கோப் இல்லையென்றாலும், விஜய் படம் என்பதால் தான் நடிக்க ஒப்புக்கொண்டேன். ஆனால் விஜய் சார் என்னைப் பற்றி இப்படி போட்டுக்கொடுப்பார் என்று நினைக்கவில்லை" என்று ராஷ்மிகா மந்தனா இன்ஸ்டாகிராம் லைவில் காமெடியாக கூறியுள்ளார்.