பிரபல தொலைக்காட்சியில் ராசிபலன் வாசித்து வந்த விஜே விஷால் தற்பொழுது எங்கே, என்ன செய்கிறார் தெரியுமா?

தனியார் தொலைக்காட்சியான சன் டிவியில் தினமும் காலை மிகவும் இனிமையான குரலில் ராசிபலன் வாசித்து வந்தவர் தொகுப்பாளினி விஷால் சுந்தர்.
இவர் டிசிஎஸ் நிறுவனத்தில் பணியாற்றிக் கொண்டே பகுதிநேரமாக தினமும் காலையில் ராசிபலன் வாசித்து வந்தார். இதன் மூலம் பெருமளவில் பிரபலமானார்.
மேலும் ஏறக்குறைய 18 வருடங்களாக சன் டிவியில் பணியாற்றிய அவர் தற்பொழுது தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் வருவதில்லை. இவர் தான் பணியாற்றிய ஐடி நிறுவனத்தின் வேலை காரணமாக மூன்று ஆண்டுகளுக்கு லண்டன் சென்று பணியாற்றியுள்ளார். அதனால் ராசிபலன் நிகழ்ச்சியிலிருந்து விலகியுள்ளார்.
இந்நிலையில் சென்னை வருகை தந்த அவர் பிரபல பத்திரிகையாளர்களிடம் அளித்த பேட்டியில் கூறுகையில், எனது நிறுவன வேலையின் காரணமாக மூன்று வருடம் லண்டனில் இருக்க வேண்டிய சூழ்நிலை உருவானது. அதனால் நான் சன் டிவியில் இருந்து விலகினேன.
மேலும் லண்டனிலிருந்து வந்த பிறகு பகுதி நேரமாக வேலை செய்யலாம் என டெஸ்ட் ஷூட் போயிருந்தேன். ஆனால் அதற்கான ரிசல்ட் எதுவும் இதுவரை வரவில்லை. ஐடி நிறுவனம் எனக்கு பெரும் வளர்ச்சியை கொடுத்துள்ளது. அதனால் எதற்காகவும் நான் எனது வேலையை மட்டும் விடுவதாக இல்லை.
இந்நிலையில் இப்பொழுது சில பத்திரிகைகளில் லைப் ஸ்டைல் குறித்து எழுதி வருகிறேன். மீண்டும் லண்டன் சென்று விடுவேன் என கூறியுள்ளார்.