மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
44 வயதிலேயே பாட்டியான கமல் பட பிரபல நடிகை.! செம ஷாக்கான ரசிகர்கள்!!
தமிழ் சினிமாவில் சாது என்ற படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் பிரபல பாலிவுட் நடிகை ரவீணா தண்டன். அதனை தொடர்ந்து அவர் கமல்ஹாசனுக்கு ஜோடியாக ஆளவந்தான் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். அதனை தொடர்ந்து அவர் பாலிவுட்டில் ஏராளமான படங்களில் நடித்து பிரபலமாகவுள்ளார்.
இந்நிலையில் ரவீணா அவரது 21வது வயதிலேயே பூஜா மற்றும் சாயா என்ற 2 பெண் குழந்தைகளை தத்தெடுத்து வளர்க்க தொடங்கினார். அதனை தொடர்ந்த அவருக்கு திருமணமானது. அவரது கணவர் அனில் தண்டரி. அவர்களுக்கு ராஷா, ரன்பிர் என்ற இருகுழந்தைகள் உள்ளனர். ரவீணாவிற்கு தற்போது 44 வயதாகிறது. அதனை தொடர்ந்து கடந்த 2016-ம் ஆண்டு அவரது மூத்த பெண்ணான சாயாவுக்கு ஷான் மெண்டாஸ் என்பவருடன் திருமணம் நடத்தி வைத்தார்.
இந்நிலையில் சாயா கடந்த சில தினங்களுக்கு முன்பு அழகிய குழந்தையை பெற்றெடுத்துள்ளார். அதன் மூலம் நடிகை ரவீணா பாட்டியானார். இந்நிலையில் குழந்தையை வரவேற்பதற்காக ரவீணா பல்வேறு விதமான பூஜைகள் நடத்தியுள்ளார். இந்நிலையில் 44 வயதிலேயே பாட்டியாக அவதாரம் எடுத்துள்ள ரவீணாவிற்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.