மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அதை நான் மனதார ஏத்துக்கிறேன்.. பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய ரவீனா உருக்கமாக போட்ட முதல் பதிவு.!
விஜய் தொலைக்காட்சியில் பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி கடந்த அக்டோபர் 1-ம் தேதி தொடங்கி விறுவிறுப்பாகச் சென்று இறுதி கட்டத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது. 91 நாட்களை வெற்றிகரமாக கடந்த இந்த நிகழ்ச்சியில் தற்போது மாயா, விசித்ரா, பூர்ணிமா, அர்ச்சனா, விஷ்ணு விஜய், மணி உள்ளிட்டோரே உள்ளனர்.
இந்த பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் போட்டியாளர்களுள் ஒருவராக கலந்து கொண்டு கடந்த வாரம் குறைந்த வாக்குகளை பெற்று வெளியேறியவர் ரவீனா. இவர் பிக்பாஸ் வீட்டில் மணியுடன் சுற்றித் திரிந்து காதல் சர்ச்சையில் சிக்கினார். இந்நிலையில் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய ரவீனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் முதன்முதலாக பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் அவர், முதலாவதாக நான் பிக்பாஸ் வீட்டில் இருந்தபோது எனக்கு நீங்கள் கொடுத்த அன்பிற்கும் ஆதரவிற்கும் எனது மனமார்ந்த நன்றி. இந்த 91 நாட்கள் என்னால் முடிந்தவரை உங்கள் அனைவரையும் மகிழ்வித்தேன் என நம்புகிறேன். இந்த நிகழ்ச்சி குறித்து எனது அனுபவத்தை ஒரே வார்த்தையில் சொல்ல முடியாது. சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால் இது எனது வாழ்க்கையை மாற்றிய ஒரு அனுபவமாகவே இருந்தது.
கமல் சாருக்கும், விஜய் டிவிக்கும், எண்டிமால் நிறுவனத்திற்கும் இந்த வாய்ப்பினை எனக்கு அளித்ததற்காக நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். மேலும் பிக்பாஸ் வீட்டை எனது சொந்த வீட்டை போல உணர வைத்த என்னுடைய சக போட்டியாளர்கள் அனைவருக்குமே எனது நன்றி. இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியை வாழ்க்கை பாடமாகவே நான் எடுத்துக் கொள்கிறேன். இதன் மூலம் நான் செய்த சில தவறுகளை திருத்திக் கொள்வதற்கான வேலையை செய்கிறேன். மேலும் உங்களது கருத்துக்களை நான் மனதார ஏற்றுக்கொள்கிறேன். பிக்பாஸ் நிகழ்ச்சி என்றுமே எனது மனதிற்கு நெருக்கமான ஒரு விஷயமாகவே இருக்கும் என தெரிவித்துள்ளார்.