மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அட.. இவர்தான் மௌனராகம் சீரியல் நடிகை ரவீனாவின் காதலரா! பிறந்தநாளன்று கொடுத்த சர்ப்ரைஸ்! வைரலாகும் புகைப்படங்கள்!!
விஜய் தொலைக்காட்சியில் வித்தியாசமான கதைக்களத்துடன் ஏராளமான சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகின்றன. இவ்வாறு கடந்த 2017-ம் ஆண்டு தொடங்கி குடும்பம், இசை என்ற கதையை மையமாக கொண்டு ஒளிபரப்பாகி வந்த தொடர் மௌன ராகம். 873 எபிசோடுகளை கடந்த இந்த தொடர் கடந்த செப்டம்பர் மாதம் நிறைவடைந்தது.
அதனை தொடர்ந்து தற்போது அதன் இரண்டாம் பாகம் தொடங்கி விறுவிறுப்பாக சென்று கொண்டுள்ளது. அதில் சக்தி என்ற கதாபாத்திரத்தில் நடிப்பவர் ரவீனா. எளிமையான கிராமத்து பெண் லுக்கில் அவரது நடிப்பு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மேலும் சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவ்வாக இருக்கும் அவர் அவ்வப்போது அவரது போட்டோஷூட் புகைப்படங்கள் மற்றும் டப்மாஸ் வீடியோக்கள் வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். இந்நிலையில் அண்மையில் ரவீனா அவரது 18-வது பிறந்தநாளை நண்பர்களுடன் இணைந்து கொண்டாடியுள்ளார்.
இந்நிலையில் அவர் தீபக் ராஜா என்பவருடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து, என்னுடைய இந்த நாளை மறக்கமுடியாத நாளாக மாற்றியதற்கு மிக நன்றி. இதுவரை நடந்தவற்றில் மிகச் சிறந்தது நீங்கள் கிடைத்ததுதான். தயவு செய்து நிரந்தரமாக என்னுடன் இணைந்து இருக்க முடியுமா? என பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலான நிலையில் அதனைக் நெட்டிசன்கள் இவர்தான் ரவீனாவின் காதலரா என கேள்வி எழுப்பி வருகின்றனர். ஆனால் இது உண்மைதானா என்பதை ரவீனாதான் விளக்கவேண்டும்.