பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
சைவ உணவு பிரியர்களை கோவப்பட வைத்திருக்கும் ரேஷ்மி.. விளம்பர படத்தால் மீண்டும் சர்ச்சையை கிளப்பிய ராஷ்மிகா?
தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் நடித்து பிரபலமாக வளர்ந்துவரும் நடிகை ராஷ்மிகா மந்தானா. இவர் சமீபத்தில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான 'வாரிசு' திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார்.
மேலும் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான 'புஷ்பா' திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். இப்படம் மிகப்பெரிய வெற்றியானதை தொடர்ந்து 'புஷ்பா 2' தெலுங்கில் படப்பிடிப்பு நடைபெறவிருக்கிறது. இந்தியில் 'அனிமல்' என்ற திரைப்படத்தில் ரன்பீர் கபூர்க்கு கதாநாயகியாக நடிக்க இருக்கிறார்.
இவ்வறாக தமிழ், தெலுங்கு, ஹிந்தி என அனைத்து மொழி சினிமாவிலும் கொடிகட்டி பறந்து வருகிறார். அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கிக் கொள்ளும் ரேஷ்மா மந்தானா, சமீபத்தில் விளம்பர படம் ஒன்றில் நடித்திருக்கிறார். அது சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.
இதன்படி எல்லா பேட்டிகளிலும் தான் சைவ உணவை மட்டுமே விரும்பி சாப்பிடுவதாக கூறியிருக்கிறார். ஆனால் தற்போது அசைவ உணவிற்கு விளம்பர படத்தில் நடித்துள்ளார். பணத்திற்காக என்ன வேண்டுமானாலும் செய்வாரா என்று சமூக வலைத்தளங்களில் நெட்டிசைன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.