சீப் பப்ளிசிட்டிக்காக இப்படியா காமிக்கிறது? நடிகையை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்.!
ஆர்ஆர்ஆர் படம் ஓரின சேர்க்கையாளர் படமா...? ஆஸ்கர் விருது பெற்ற கலைஞரின் கருத்தால் சர்ச்சை.!

ராஜமவுலி இயக்கத்தில் ஜுனியர் என்டிஆர், ராம்சரண், ஆலியா பட் மற்றும் பலர் நடித்து வெளிவந்து 1000 கோடிக்கும் அதிகமான வசூலைக் குவித்த படம் 'ஆர்ஆர்ஆர்'. இந்தப் படம் ஓடிடியில் வெளியான பிறகு சில எதிர்மறை விமர்சனங்களையும் பெற்றுவருகின்றன. இந்த நிலையில் முனிஷ் பரத்வாஜ் என்ற இயக்குனர் டுவிட்டர் பதிவில், ஆர்ஆர்ஆர் என அழைக்கப்படும் குப்பைப் படத்தை 30 நிமிடங்கள் வரை பார்த்தேன் என்று பதிவிட்டிருந்தார்.
அதற்கு பதிலளித்த ஆஸ்கர் விருது பெற்ற ஒலி வடிவமைப்பாளர் ரசூல் பூக்குட்டி, தன் பாலின ஈர்ப்பாளர் பற்றிய கதை என்று பதிலளித்தார். அவரது பதிவு சர்ச்சையை ஏற்படுத்தியது. மேலும், ரசூலின் இந்த மோசமான கருது பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. ராஜமவுலி இயக்கிய 'பாகுபலி' படத்தின் தயாரிப்பாளரான ஷோபு இது குறித்து, “நீங்கள் சொல்வதைப் போல ஆர்ஆர்ஆர் படம் ஒரு 'கே' காதல் கதை அல்ல, அப்படியே இருந்தாலும் 'கே காதல் கதை' என்பது மோசமானதா?, எப்படி நீங்கள் இப்படி சொல்லலாம். உங்களது சாதனைகளில் யாரோ ஒருவர் தாழ்ந்து போனதில் மிகுந்த ஏமாற்றம் என ரசூலை டேக் செய்து பதிவிட்டிருந்தார்.
I don't think @RRRMovie is a gay love story as you say but even if it was, is "gay love story" a bad thing? How can you justify using this ? Extremely disappointed that someone of your accomplishments can stoop so low! https://t.co/c5FmDjVYu9
— Shobu Yarlagadda (@Shobu_) July 4, 2022
அதற்கு பதிலளித்த ரசூல் பூக்குட்டி, முழுவதுமாக ஏற்றுக் கொள்கிறேன், இருந்தாலும் தவறில்லை. ஏற்கெனவே பொது தளத்தில் இப்படி கேலி செய்யப்படுவதைத்தான் நான் எனது நண்பருக்கு மேற்கோள் காட்டினேன். இதில் வளைந்து கொடுக்க எதுவும் இல்லை. இதை பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டாம் ஷோபு. நான் எந்த குற்றத்தையும் அர்த்தப்படுத்தவில்லை. எனது வாதத்தை இத்துடன் முடிக்கிறேன் என தெரிவித்துள்ளார்.