மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அடேங்கப்பா.. வெறித்தனமா இருக்கே! நிலவு ஒளியில் இறுதிச்சுற்று நாயகி செய்த காரியத்தை பார்த்தீங்களா! மிரளவைக்கும் வீடியோ!!
தமிழ் சினிமாவில் மாதவன் நடிப்பில் வெளிவந்த இறுதிச்சுற்று படத்தில் குத்துச்சண்டை வீராங்கனையாக நடித்ததன் மூலம் நாயகியாக அறிமுகமானவர் ரித்திகா சிங். இந்த படத்தின் மூலம் அவர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பெருமளவில் பிரபலமானார். மேலும் இந்தப் படத்தில் கிடைத்த வரவேற்பை அடுத்து இவருக்கு படவாய்ப்புகளும் குவிந்தது.
இவர் நிஜ வாழ்க்கையிலும் குத்து சண்டை வீராங்கனையாக உள்ளாராம். இறுதி சுற்று படத்தை தொடர்ந்து ரித்திகா சிங் ஆண்டவன் கட்டளை, சிவலிங்கா, பாக்ஸர், ஓ மை கடவுளே போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில் சமூக வலைத்தளத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் ரித்திகா சிங் தனது உடலை கட்டுக்கோப்பாக வைத்து கொள்வதிலும் மிகுந்த ஈடுபாடு காட்டி வருகிறார். இந்நிலையில் அவர் தற்போது நிலவு ஒளியில் வெறித்தனமாக உடற்பயிற்சி செய்யும் வீடியோவை வெளியிட்டுள்ளார். அது வைரலாகி நெட்டிசன்களை வாயடைக்க வைத்துள்ளது.