"எனக்கு சினிமாவில் நடிப்பதற்கு சுத்தமாக பிடிக்காது" நடிகை நித்யா மேனன் கூறிய உண்மை....!?
கோலாகலமாக நடந்த நடிகர் ரோபோ சங்கரின் மகள் நிச்சயதார்த்தம்.! மாப்பிள்ளை இவர்தானா! வைரலாகும் கியூட் கிளிக்ஸ்!!
விஜய் தொலைக்காட்சியில் கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, தனது மிமிக்ரி மற்றும் நகைச்சுவை திறமையால் ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானவர் ரோபோ சங்கர். சின்னத்திரையில் கலக்கிய அவர் பின்னர் வெள்ளித்திரையில் காமெடி நடிகராக களமிறங்கி பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து வருகிறார்.
ஜெயம் ரவியின் தீபாவளி படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான அவர் தொடர்ந்து மாரி, வேலைனு வந்துட்டா வெள்ளைக்காரன், வாயை மூடி பேசவும் என பல படங்களில் நடித்துள்ளார். நடிகர் ரோபோ சங்கரின் மகள் இந்திரஜா. இவர் விஜய் நடிப்பில் வெளிவந்த பிகில் படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர். மேலும் இந்திரஜா விருமன் படத்தில் ஹீரோயின் அதிதிக்கு தோழியாக நடித்திருந்தார்.
இந்நிலையில் இந்திரஜாவுக்கு அவரது முறைமாமன் கார்த்திக் உடன் திருமணம் நடைபெற உள்ளதாக தகவல்கள் பரவி வந்தது. இந்நிலையில் அவர்கள் இருவருக்கும் கோலாகலமாக நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது. அந்த விழாவில் சிறப்பு விருந்தினர்களாக நக்கீரன் கோபால், அம்மா கிரியேஷன் சிவா ஆகியோர் பங்கேற்றுள்ளனர். இந்திரஜாவின் திருமண நிச்சயதார்த்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி பலரும் அவர்களுக்கு வாழ்த்து கூறி வருகின்றனர்.