மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
Critics Choice Award: நாட்டு நாட்டை தொடர்ந்து அடுத்த விருதை தட்டித்தூக்கிய ஆர்ஆர்ஆர் திரைப்படம்... எந்த பிரிவில் தெரியுமா?.!
மார்ச் 2022ல் ராஜமௌலி இயக்கத்தில், ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர், ஆலியா பட், அஜய் தேவகன், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் நடித்து, 5 க்கும் மேற்பட்ட மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டு வெளியான திரைப்படம் RRR.
ரூ.550 கோடி செலவில் எடுக்கப்பட்ட RRR படம் ரூ.1200 கோடி வசூல் செய்தது. தற்போது விமர்சகர்கள் தேர்வு செய்யும் விருதுக்காக 5 பிரிவுகளில் நாமினேஷன் செய்யப்பட்டது. ஏற்கனவே அப்படத்தின் நாட்டு நாட்டு பாடல் சிறந்த பாடலாக தேர்வு செய்யப்பட்டது.
அதனைத்தொடர்ந்து, தற்போது சிறந்த வெளிநாட்டு படமாக ராஜமௌலியின் RRR தேர்வு செய்யப்பட்டுள்ளது என RRR அறிவிக்கப்பட்டுள்ளது. Visual Effects பிரிவில் ஜேம்ஸ் கேமரூனின் அவதார் தி வே ஆப் வாட்டர் படத்துடன் போட்டியிட்ட RRR தோல்வியை தழுவியது.
Congratulations to the cast and crew of @RRRMovie - winners of the #criticschoice Award for Best Foreign Language Film.#CriticsChoiceAwards pic.twitter.com/axWpzUHHDx
— Critics Choice Awards (@CriticsChoice) January 16, 2023