மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அடேங்கப்பா.. முதல் நாளிலேயே இவ்வளவா! உலகம் முழுவதும் ஆர்ஆர்ஆர் படம் செய்த வசூல்! எத்தனை கோடி தெரியுமா??
உலகளவில் மாபெரும் வரவேற்பை பெற்ற பாகுபலி படத்தை இயக்கியதன் மூலம் பெருமளவில் பிரபலமானவர் பிரம்மாண்ட இயக்குனர் ராஜமௌலி. பாகுபலி படத்தை தொடர்ந்து அவர் ஆர்ஆர்ஆர் திரைப்படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் தெலுங்கு சினிமாவில் முன்னணி நட்சத்திரங்களாக வலம் வரும் ராம்சரண், ஜூனியர் என்டிஆர், ஆகியோர் நடித்துள்ளனர்.
மேலும் அப்படத்தில் தேஜா, அஜய் தேவ்கன், சமுத்திரகனி, ஆலியா பட் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். 550 கோடி பட்ஜெட்டில் உருவான ஆர்ஆர்ஆர் திரைப்படம் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய 5 மொழிகளில் நேற்று உலகம் முழுவதும் வெளியானது.
இந்நிலையில் இப்படம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஆர்ஆர்ஆர் திரைப்படம் தமிழகத்தில் முதல் நாளில் ரூ. 12 கோடி வரை, ஆந்திராவில் ரூ.100 கோடி வரை வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் படம் வெளியான முதல் நாளிலேயே உலகம் முழுவதும் 200 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.