பாக்கியாவிற்கு அடுத்தபடியாக வரும் பெரிய ஆபத்து! அதில் பாக்கியா மீண்டு வருவாரா? ப்ரோமோ வீடியோ இதோ....
அடேங்கப்பா!! இத்தனை கோடியா?? RRR திரைப்படம் முதல் நாளில் மட்டும் எத்தனை கோடி வசூல் தெரியுமா??

இயக்குனர் ராஜமவுலி இயக்கத்தில் வெளியான ஆர்.ஆர்.ஆர். திரைப்படம் முதல் நாளில் மட்டும் சுமார் 257 கோடி ரூபாய் வரை வசூலித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ராஜமவுலி இயக்கத்தில் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர். நடிப்பில் கடந்த 25 ஆம் தேதி வெளியானது RRR திரைப்படம். பாகுபலி என்ற பிரமாண்ட திரைப்படத்தை கொடுத்த இயக்குனர் என்பதால், RRR திரைப்படம் மீதான எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் அதிகளவில் இருந்தது. அதற்கு ஏற்றாற்போல் RRR திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
சுமார் 300 கோடி ரூபாய் பொருட்செலவில் உருவான RRR திரைப்படம், வெளியான முதல் நாளில் மட்டும் 257 கோடி ரூபாய் வரை வசூலித்திருப்பதாக கூறப்படுகிறது. இதன்மூலம், இந்திய அளவில் முதல் நாளில் அதிக வசூலை குவித்துள்ள அப்படம், பாகுபாலி 2ஆம் பாகத்தின் சாதனையை முறியடித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஆந்திராவில் மட்டும் முதல் நாளில் 120 கோடி ரூபாயும், தமிழகத்தில் 12 கோடி ரூபாய்க்கும் அப்படம் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.