மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ஆர்.ஆர்.ஆர் படத்தின் 2ம் பாகம் உறுதி; மகாபாரத கதையை படமாக்கும் முயற்சி விறுவிறுப்பு.! மாஸ் காண்பிக்கும் ராஜமௌலி.!
கடந்த 2022ம் ஆண்டு எஸ்.எஸ் ராஜமௌலி இயக்கத்தில், ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர், அஜய் தேவ்கன், ஆலியா பட், ரேவ் ஸ்டீவ்சன் உட்பட பலர் நடித்து ரூ.550 கோடி பொருட்செலவில் உருவாகிய திரைப்படம் ஆர்.ஆர்.ஆர். இந்த படம் தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் உட்பட பல மொழிகளில் வெளியாகி ரூ.1200 கோடி வசூல் செய்து மாபெரும் சாதனை படைத்தது. நாட்டு நாட்டு பாடல் ஆஸ்கர் வாங்கியது.
இந்நிலையில், இந்த படத்தின் இரண்டாம் பாகம் குறித்த முடிவுகள் இறுதிக்கட்டத்தை எட்டி இருப்பதாகவும், வாய்ப்பு இருக்கும் பட்சத்தில் அதற்கான அறிவிப்புகள் விரைவில் வெளியாகலாம் என்றும் தெரியவந்துள்ளது. ஹாலிவுட் தரத்தில் மீண்டும் ராம் சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் ஆகியோரை வைத்து ஆர்.ஆர்.ஆர் படத்தின் 2ம் பாகம் உருவாகலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
அந்த படத்தை எஸ்.எஸ் ராஜமௌலி இயக்கலாம் அல்லது அவரின் பட்டறையில் தயாராகி வரும் இயக்குனர்கள் இயக்கலாம் என்று தகவல் தெரிவிக்கின்றன. ராஜமௌலியின் கனவு திரைப்படமாக கருதப்படும் மஹாபாரத திரைப்படம், மகேஷ் பாபுவுடன் இணைந்து பணியாற்றும் திரைப்படம் வெளியீடுக்கு பின்னர் மஹாராபரத படத்திற்கான பணிகள் தொடங்கலாம்.