96 பட குட்டி ஜானு.. பயங்கரமான வளர்ச்சியா இருக்கே.?! சமீபத்திய போட்டோ.. கிறங்கிப்போன ரசிகர்கள்.!
"எப்படி இருந்த சாய் பல்லவி இப்படி ஆயிட்டாங்களே!" மாரி-2 படத்துக்காக காக்கி சட்டையில் மலர் டீச்சர்
கடந்த 2015ம் ஆண்டு பாலாஜி மோகன் இயக்கத்தில் நடிகர் தனுஷ், காஜல் அகர்வால், ரோபோ சங்கர் உட்பட பலரும் நடித்து வெளியான படம் 'மாரி'. இந்தப் படம் பெரிய அளவில் வசூல் சாதனை புரியவில்லை என்றாலும், இப்படத்தில் வரும் வசனங்கள் இன்றும் பலரால் பேசப்படுகிறது.
இந்நிலையில் முதல் பாகத்தை இயக்கிய பாலாஜி மோகனே மீண்டும் மாரி இரண்டாம் பாகத்தையும் இயக்கி வருகிறார். `மாரி -2' படத்தில் முக்கிய மாற்றமாக காஜல் அகர்வாலுக்குப் பதிலாக சாய் பல்லவி கதாநாயகியாக நடிக்கிறார். இவரைத்தவிர வரலட்சுமி சரத்குமார், டோவினோ தாமஸ், கிருஷ்ணா, ரோபோ சங்கர் உட்பட பலர் நடித்துள்ளனர்.
இதனை தொடர்ந்து மாரி-2 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை கடந்த நவம்பர் 1-ஆம் தேதி நடிகர் தனுஷ் வெளியிட்டார். இந்த போஸ்டர் மாரி முதல் பாகத்தை போன்றே இருந்ததால் பல விமர்சனங்கள் எழுந்தன.
எனவே மீண்டும் நவம்பர் 5-ஆம் தேதி படத்தின் செகண்ட் லுக் போஸ்டரை தனுஷ் வெளியிட்டார். இதுவும் பெரிய அளவிற்கு வரவேற்பை பெறவில்லை.
இந்நிலையில் இன்று மாரி-2 படக்குழுவானது படத்தில் கதாநாயகியான சாய் பல்லவியின் போஸ்ட்டரை வெளியிட்டுள்ளது. அதில் சாய் பல்லவி மாரி-2 படத்தில் 'அராத்து ஆனந்தி' என்ற கதாபாத்திரத்தில் நடிப்பதாக கூறப்பட்டுள்ளது. மேலும் அவர் ஒரு ஆட்டோ ஓட்டுனரை போல் காக்கி சட்டை அணிந்துள்ளார்.
Araathu Aanandhi 🙈 pic.twitter.com/hLhdX6rBHi
— Sai Pallavi (@Sai_Pallavi92) November 7, 2018
#AraathuAanandhi @Sai_Pallavi92 dazzling beauty..Enna styleya😍😍.alluthu 😘 @dhanushkraja @thisisysr @directormbalaji pic.twitter.com/Ys3mF7UgVV
— Ajith kumar J (@thisisajith218) November 7, 2018