96 பட குட்டி ஜானு.. பயங்கரமான வளர்ச்சியா இருக்கே.?! சமீபத்திய போட்டோ.. கிறங்கிப்போன ரசிகர்கள்.!
1 கோடி சம்பளம்! கறாராக வேண்டாம் என்று சொன்ன சாய் பல்லவி! அதிர்ச்சியில் ரசிகர்கள்.
தமிழ், தெலுங்கு, மலையாளம் என தென்னிந்திய அளவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் நடிகை சாய் பல்லவி. ப்ரேமம் என்ற மலையாள படத்தில் மலர் டீச்சராக சினிமாவில் அறிமுகமான இவருக்கு முதல் படமே மாபெரும் வரவேற்பை பெற்றுத்தந்தது.
இதனை அடுத்து அடுத்தடுத்த படங்களில் நடிக்கும் வாய்ப்பு இவருக்கு தேடி வந்தது. தமிழில் சூர்யா நடிப்பில் NGK படத்திலும், தனுஷ் நடிப்பில் வெளியான மாறி 2 படத்திலும் கதாநாயகியாக நடித்தார் சாய் பல்லவி.
இந்நிலையில் மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை வைத்திருக்கும் சாய் பல்லவியை இதற்கு முன்னர் ஒரு அழகு சாதன பொருள் விளம்பரத்திற்கு நடிக்க 1 கோடி சம்பளம் தருவதாக பேச்சு வார்த்தை நடந்தது. ஆனால், அழகு சாதன பொருட்கள் விளமபிராத்தில் நடிக்க மாட்டேன் என சாய் பல்லவி அந்த வாய்ப்பை மறுத்துவிட்டார்.
தற்போது பிரபல துணிக்கடை விளம்பரம் ஒன்றில் நடிக்க ஒரு வருடத்திற்கு ஒரு கோடி சம்பளம் தருவதாக சாய் பல்லவியிடம் பேச்சு வார்த்தை நடந்துள்ளது. ஆனால், ஒரு கோடி கொடுத்தாலும் தன்னால் துணி கடை விளம்பரத்தில் நடிக்க முடியாது என சாய் பல்லவி கறாராக கூறிவிட்டாராம்.