மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அடேங்கப்பா! பிரபல நடிகருடன் இணையும் புதிய படத்திற்கு நடிகை சாய்ப்பல்லவி கேட்டுள்ள சம்பளத்தை பார்த்தீர்களா.!
மலையாளத்தில் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்ற பிரேமம் திரைப்படத்தில் மலர் டீச்சராக நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானவர் சாய்பல்லவி. அதனை தொடர்ந்து அவருக்கு தமிழ் மற்றும் தெலுங்கில் ஏராளமான படவாய்ப்புகள் குவிய தொடங்கியது. மேலும் சாய்பல்லவி தமிழில் என்.ஜி.கே மற்றும் மாரி 2 திரைப்படங்களில் நடித்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து சாய்பல்லவி தற்போது தெலுங்கில் நாக சைதன்யாவுடன் லவ் ஸ்டோரி மற்றும் விராட பருவம் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். விராட பருவம் திரைப்படத்தில் சாய்பல்லவி நக்சலைட் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
அதனையடுத்து சாய்பல்லவி தற்போது இயக்குனர் ராகுல் சங்க்ரித்யன் இயக்கத்தில் நானி நடிக்கும் புதிய படத்தில் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்த நிலையில் அப்படத்தில் நடிக்க சாய் பல்லவி 2 கோடி சம்பளம் கேட்டதாக தகவல்கள் பரவி வருகிறது. மேலும் சம்பளத்தை கொஞ்சம் குறைக்கும்படி பட குழுவினர் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.