பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சியுடன் கைகோர்ப்பு.. "அவருகிட்ட நிறைய கத்துகிட்டன்" - நடிகை சாக்ஷி நெகிழ்ச்சி பதிவு..!!
தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் துணை கதாபாத்திரங்களில் நடித்தவர் நடிகை சாஷி அகர்வால். இவர் திரைப்படங்கள் மட்டுமல்லாது விளம்பரபடங்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் கடந்த 2018-ஆம் ஆண்டு சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் நடிப்பில் வெளியான "காலா" திரைப்படத்தில் நடித்து பிரபலமடைந்தார். இதற்கு முன்பாக சாக்ஷி சில படங்களில் நடித்திருந்தாலும், காலா படத்திற்கு பின்னரே மக்களால் அறியப்பட்டார்.
இதனை தொடர்ந்து நடிகர் அஜித் நடிப்பில் வெளியான விசுவாசம் படத்திலும் நயன்தாராவின் உதவியாளராக நடித்திருந்தார். அடுத்து தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3-ல் பங்கேற்று மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார்.
எப்பொழுதும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சுறுசுறுப்பாக இயங்கும் இவர், அவ்வப்போது தனது புகைப்படம் மற்றும் வீடியோக்களை வெளியிடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். தற்போது அவரது இன்ஸ்டா ஸ்டோரியில் இயக்குனர் சந்திரசேகருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.
மேலும் அதில், "நான் கடவுள் இல்லை" என்ற படத்தை குறிப்பிட்டு, "எனது வாழ்க்கையில் அடுத்த படியை எடுத்துவைக்க சந்திரசேகரர் சார் உதவியுள்ளார். அவருடன் இணைந்து பணியாற்றியது மகிழ்ச்சி. அவரிடம் இருந்து நிறைய விஷயங்கள் கற்றுக் கொண்டேன்" என்று கூறியுள்ளார்.