#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
செம ஜாலியாக ஆட்டோ ரிக்ஷா ஓட்டிய பிரபல முன்னணி நடிகர்!அட.. யார்னு பார்த்தீங்களா! இணையத்தை கலக்கும் வீடியோ!!
பாலிவுட் சினிமாவில் ஏராளமான சூப்பர் ஹிட், பிளாக்பஸ்டர் திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகராக கொடிகட்டிப் பறப்பவர் நடிகர் சல்மான் கான். இவருக்கென நாடு முழுவதும் ஏராளமான ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. அவர் அண்மையில் தனது 56வது பிறந்தநாளை மிகவும் கோலாகலமாக கொண்டாடியுள்ளார்.
இதற்கிடையில் பிறந்தநாளுக்கு ஓரிரு நாட்களுக்கு முன்பு அவர் பண்ணை வீட்டில் விவசாய பணியில் ஈடுபட்டபோது பாம்பு ஒன்று அவரை மூன்று முறை கடித்துள்ளது. உடனே அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 6மணி நேரம் சிகிச்சை பெற்று பின்னர் வீடு திரும்பினார். இது திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில் அவர் தற்போது மும்பை அருகே உள்ள பன்வேல் நகரில் உள்ள சாலையில் உற்சாகமாக ஆட்டோ ரிக்ஷா ஓட்டியுள்ளார். தலையில் தொப்பி மற்றும் டிசர்ட் அணிந்துகொண்டு சல்மான் கான் ஆட்டோ ஓட்ட அவருடைய நண்பர்கள் பின்னால் ஆட்டோவில் அமர்ந்துள்ளனர். அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பெருமளவில் வைரலாகி வருகிறது.